×

ஜிஎஸ்டி, கம்பெனிகள் சட்டத்தால் சி.ஏ.க்கள் பணி நியமனம் அதிகரிப்பு

புதுடெல்லி : தொடர் கண்காணிப்பு, நிர்வாக திறன் மேம்பாடு ஆகியவை காரணமாகவும் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும், நிறுவனங்களில் சி.ஏ.க்கள் தேவை அதிகரித்துள்ளது. இதனால், இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா (ஐசிஏஐ) கல்வி நிறுவனத்தில் படித்து முடித்து சிஏ பட்டம் பெற்ற ஆடிட்டர்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பு முகாம்களில் சிறந்த வேலையும் கணிசமான அளவு சம்பளத்துடன் வேலை கிடைக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சம்பளம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. அதாவது சர்வதேச பணி நியமனத்தில் ஆண்டிற்கு ரூ.36 லட்சம் வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐசிஏஐயில் கடந்த பிப்ரவரி - மார்ச் 2019ல் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் மொத்தம் 6,646 பேர் பங்கேற்றனர்.

இவர்களில் 3,815 பேருக்கு உடனடியாக வேலைவாய்ப்பு கிடைத்தது.  வேலைவாய்ப்பில் கடந்த 2018ல் சிஏ படித்து முடித்த 1,473 பேரும் அடங்குவர். அசஞ்சர், அல்ஸ்டோம், பார்லேஸ், குளோபல் சர்வீசஸ், பிளிப்கார்ட், அமேசான், ஐடிசி உள்பட 139 நிறுவனங்கள் தற்போது சிஏ.க்களை தங்களது நிறுவனங்களில் பணியில் அமர்த்துகின்றனர். சிஏ படித்தவர்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது, குறிப்பாக வங்கிகள் துறையிலும் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என்று ஐசிஏஐ வட்டாரங்கள் தெரிவித்தன. வரி சீரமைப்பில், ஜிஎஸ்டி அறிமுகம் மற்றும் ஒட்டுமொத்தமாக பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிப்பு ஆகியவையால் சிறிய, பெரிய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சிஏ படித்த ஆடிட்டர்கள் அவசியம் தேவைப்படுகின்றனர். வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெற்ற 3,180 பேரில், 730 பேருக்கு ஆண்டு சம்பளம் ரூ.9 லட்சத்திற்கும் அதிகம். இதேபோல், 55 சதவீதம் பேருக்கு ஆண்டு சம்பளம் ரூ.7.5 முதல் 9 லட்சம் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சராசரி ஆண்டு ஊதியம் ரூ.7.43 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

* ஐசிஏஐ.யில் கடந்த பிப்ரவரி - மார்ச் 219ல் மொத்தம் 6,646 பேர் சி.ஏ.வாக தகுதி பெற்றனர். வேலைவாய்ப்பு முகாமில் இவர்களில் 3,815 பேருக்கு வேலை கிடைத்து பெரிய நிறுவனங்களில் பணியில் நியமனம் பெற்றனர். கடந்த 2018ல் 1,473 பேர் படித்து முடித்து சி.ஏ. தகுதி பெற்றனர்.

* அசஞ்சர், அல்ஸ்டோம், பார்லேஸ், குளோபல் சர்வீசஸ், பிளிப்கார்ட், அமேசான், ஐடிசி, ஏஎன்ஐ டெக்னாலஜிஸ் (ஓலா) ஆகிய சில நிறுவனங்கள் ஐசிஏஐ வளாகத்தில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் இருந்து சிஏக்களை தேர்வு செய்து தங்கள் நிறுவனங்களில் பணி அமர்த்தி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : GST ,CAs , GST, Companies Act to increase, CAs job appointment
× RELATED கூடுவாஞ்சேரியில் பயணியர்...